கோவிந்தசாலையில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: கோவிந்தசாலை பகுதியில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் -அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது புதுச்சேரி த.வெ.க.வில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார். இதில் புதுச்சேரி உருளையன்பேட்டையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரான நேயம் மக்கள் கழகத் தலைவர் நேருவை, விஜய் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து, நேயம் மக்கள் கழக தலைவர் நேரு உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை, பள்ளிக்கூட வீதி, கருணாநிதி வீதி, கல்வே பங்களா மற்றும் அந்தோணியார் கோவில் தெருக்களில் நேற்று வீடு வீடாக சென்று அப்பகுதியில் சிமன்ட் சாலை அமைத்தது, குடியிருப்பு பகுதிகளை சீரமைத்தது உட்பட பல நலத்திட்ட பணிகளை எடுத்து கூறி குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவரை, அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது, வேட்பாளருடன் த.வெ.க., மற்றும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement