ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்: காங்., வேட்பாளர் கந்தசாமி வாக்குறுதி
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் (தனி) தொகுதி காங்., வேட்பாளர் கந்தசாமி, நேற்று வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரத்தார்.
அப்போது, அவர் பேசுகையில், ஏற்கனவே பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து முதல்வரான ரங்கசாமி, மத்திய அரசு தன்னை சுதந்திரமாக செயல்படவில்லை. நிதி ஒதுக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார். ஆனால் மீண்டும் அதே கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறார். ல.ஜ.க., இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார்.
மக்கள் ஏமாறாமல் காங்., கை சின்னத்திற்கும் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் ஓட்டு போட வேண்டும். நான் அமைச்சராக இருந்தபோது ஏம்பலம் தொகுதிக்கு ரூ.5 கோடியில் திருமண மண்டபம், கோர்க்காடு ஏரியை சுற்றுலா தளம் கொண்டு வந்தோம். 800 பேர் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் கோர்க்காடு - கரிக்கலாம்பாக்கம் இடையே ரூ.65 கோடி மதிப்பில் திட்டம் கொண்டு வந்தேன்.
அதேபோன்று, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவச கல்விக்கான கோப்பை தயாரித்தோம். அடுத்து வந்த என்.ஆர்.காங்., அரசு இது எதையும் செய்யவில்லை.
கை சின்னத்தில் ஓட்டு போட்டு என்னை வெற்றி பெறச் செய்தால், நின்று போன திட்டங்களை செய்ய முடியும். கடந்த 5 ஆண்டுகள் ஏம்பலம் தொகுதியில் எந்த திட்டமும் செய்யவில்லை. மீண்டும் அதே தவறை செய்யாமல் கை சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும்
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்
-
சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு ஜவாஹிருல்லா சென்றது ஏன்? ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
-
தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
-
மோடி, அமித் ஷா வாகனத்தை சோதனை செய்வார்களா: கேட்கிறார் வைகோ
-
மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்
-
செந்தில்பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார்!