ஆஞ்சநேயர் கோவிலில் அ.தி.மு.க.,வினர் பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில், அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு, சிறப்பு வழிபாடு நடத்தினார்.

நிகழ்ச்சியில், பா.ம.க., பழனிவேல், மணிமாறன், பெருமாள், பா.ஜ., சுகுமார், வடிவேல் பழனி, அ.தி.மு.க., மாநில நிர்வாகி அற்புதவேல், நகர செயலாளர் ராமதாஸ், டாக்டர் முத்தையன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் தங்க சேகர், எம்.ஜி.ஆர்., மன்றம் தனுசு முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திறந்த வேனில் சென்று, ஓட்டு சேகரித்தார்

மாவட்ட பேரவை இணைச் செயலாளர் மோகன்ராஜ், வளவனுார் நாராயணன், ஒன்றிய இளைஞரணி ரமேஷ், கவுன்சிலர்கள் கோல்டு சேகர், கோதண்டம், கலை, தொழில்நுட்ப பிரிவு மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி, பாக்கியலட்சுமி, லதா, கண்டமானடி ராஜி.

வழக்கறிஞர்கள் செந்தில், தமிழ்ச்செல்வன், சஞ்சய்காந்தி, ஜியாவுதீன், சந்தோஷ், முன்னாள் கவுன்சிலர்கள் அசோக், வரதன், நாகமுத்து, வார்டு செயலாளர்கள் கிருஷ்ணன், பாஸ்கர், வர்த்தக அணி ரகுநாதன், பொறியாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement