மயிலம் தே.மு.தி.க.,வேட்பாளரை ஆதரித்து தி.மு.க., எம்.பி., பிரசாரம்
திண்டிவனம்: மயிலம் தொகுதி, வல்லம் மத்திய ஒன்றியத்தில் தே.மு.தி.க.,வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து ஜெகத்ரட்சகன் எம்.பி., பிரசாரம் செய்தார்.
நேற்று காலை மயிலம் தொகுதி வல்லம் மத்திய ஒன்றியத்தைச் சேர்ந்த ஆனாங்கூர், களையூர், கடம்பூர் கிராமங்களில் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
மயிலம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், வல்லம் மத்திய ஒன்றிய திமு.க., செயலாளர் இளம்வழுதி, வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட காங்., தலைவர் ரங்கபூபதி, தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரசேன் உள்ளிட்ட கட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
எந்தெந்த தடங்களில் சிற்றுந்து தேவை? மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
ஓட்டு பதிவு இயந்திரங்கள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
-
மாற்றுத்திறனாளிகள் ஓட்டு அளிக்க 'சக்ஷம்' செயலியில் பதிவு செய்யலாம்
-
6.5 கிலோ ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைது
-
நேரு மார்க்கெட்டில் வெளியேறும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாவதோடு சுகாதார சீர்கேடு
-
நெல் சேமிப்பு கிடங்கு இல்லாததால் கரும்பாக்கம் விவசாயிகள் அவதி