பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

செஞ்சி: செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 22; இவர், கடந்த 8ம் தேதி தனது பாட்டி காந்தாமணி தனக்கு 2000ம் ஆண்டில் தானமாக கொடுத்த 77 சென்ட் இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். மேலும், பட்டா மாற்றம் செய்வது தொடர்பாக பாடிப்பள்ளம் வி.ஏ.ஓ., சிங்கார வடிவேல் என்பவரை அணுகினார். அவர் 5,000 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து ரங்கநாதன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.

போலீசார் அறிவுரைப்படி நேற்று ரங்கநாதன், பாடிப்பள்ளம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு 5,000 ரூபாயுடன் சென்று, சிங்காரவடிவேலிடம் கொடுத்த போது அங்க மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரி, சக்கரபாணி உள்ளிட்டவர்கள், சிங்காரவடிவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement