சிருஷ்டி மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் முப்பெரும் விழா
மயிலம்: மயிலம் அடுத்த கொணமங்கலம் சிருஷ்டி மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் கல்வி உதவித்தொகை, பரிசளிப்பு, பட்டமளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு சிருஷ்டி பவுண்டேஷன் நிர்வாகி இயக்குநர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் லட்சுமி வரவேற்றார். திருஷ்டி பவுண்டேஷன் மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் அந்தோணிசாமி, ஜெயக்குமார், ஜெய்கணேஷ், சசிகுமார் பொது மேலாளர் அதிரூபன் ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், கல்வி உதவித்தொகை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். இதில் ஏராளமான மாணவியர்கள் உட்பட அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்
Advertisement
Advertisement