நீங்கள் கூப்பிட்டால் ஓடோடி வந்து நிற்பேன் :வானுார் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
வானுார்: 'வானுார் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்' என அ.தி.மு.க., வேட்பாளர் முருகன் உறுதி அளித்துள்ளார்.
கிளியனுார் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் காட்ராம்பாக்கம், ஆண்டியார்பாளையம், ஒழிந்தியாப்பட்டு, நாவல்பாளையம், ராயபேட்டை, கொடூர், நெசல் உட்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்தபோது பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு சிறப்பான ஆட்சி கொடுக்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை பழனிசாமி கொண்டு வந்தார்.
இந்த திட்டங்கள் முழுதும் தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்டது. இதனால் மக்கள் கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு இன்னங்களை சந்தித்து வருகிறார்கள். நான் வெற்றி பெற்று வந்தால், வானுார் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நிற்பேன்' என்றார்.
சக்கரபாணி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம், ஒன்றிய கவுன்சிலர்கள் கண்ணன், சந்திரமோகன், ராஜவேலு, பாலு ஜெ., பேரவை செயலாளர் வேல்முருகன் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
மேலும்
-
தி.மு.க., தேர்தல் அறிக்கைதான் 'சூப்பர் ஸ்டார்' அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., பெருமிதம்
-
ரயில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.337 கோடியாக அதிகரிப்பு
-
ரேவதி மெடிக்கல் சென்டரில் நாளை இருதய மருத்துவ முகாம்
-
பால் கொள்முதல் விலை உயர்த்தக்கோரி தர்ணா
-
டீ, காபியுடன் சரி; எங்களை கண்டு கொள்வதில்லை தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் புலம்பல்
-
முதியவர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே ஓட்டுப்பதிவு