செவியில் விசிலை ஊதி அனுப்புங்கள்: பிரசாரத்தில் விஜய் வேண்டுகோள்
சென்னை: ''வண்டி வண்டியாக வைத்திருக்கும் பணத்தை ஓட்டுக்கு கொடுத்து, எப்படியாவது வெற்றி பெற நினைப்பர்; எல்லாவற்றையும் வாங்கி கொள்ளுங்கள்,'' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறினார்.
சென்னையில் நேற்று பெரம்பூர், கொளத்துார் உள்ளிட்ட தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
வட சென்னையின் அடையாளமாக இருக்கும் பெரம்பூரில் இருந்து பிரசாரத்தை துவங்குகிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சட்டம் - ஒழுங்கு சரியில்லாத, போதைப் பொருள் அதிகமாக உள்ள தமிழகத்தை, நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தமிழகத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தது, தீயசக்தி தி.மு.க., தான்.
ஒன்றுக்கும் உதவாமல் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்திவிட்டு, சிறப்பான ஆட்சியை நடத்தியதாக உதார் விட்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின் சார். சோறு, தண்ணீர் கூட இல்லாமல் இருந்து விடலாம். ஆனால், அடிப்படை வசதி, பாதுகாப்பு இல்லாமல் எப்படி இருப்பது?
பெண் பிள்ளைகள் கழிப்பறை கூட போக முடியவில்லை; போயிட்டு வருவதற்குள் என்ன ஆகுமென்று பதற்றமாக இருக்க வேண்டி உள்ளது.
டீக்கடையில் நிம்மதியாக டீ குடிக்க முடியவில்லை; போதையை போட்டு விட்டு வந்து, வெட்டி விட்டு போய் விடுகின்றனர். இது நாடா; இல்லை காடா? இங்கு, அரசு என ஒன்று இருக்கிறதா, இல்லையா?
போலீசை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சார், ஐந்து ஆண்டுகளில் அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியவில்லை என்றால், எதற்கு இந்த ஆட்சி, அதிகாரம்? ஸ்டாலின் சாருக்கும், தி.மு.க., அரசுக்கும் குடும்பத்தோடு கொள்ளை அடிப்பது தான் முக்கியம்.
டாஸ்மாக், நகராட்சி துறையில் மட்டும் தலா, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இது வெளியில் தெரிந்தது; தெரியாமல் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். ஆனால், நகராட்சி துறையில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி, தகுதி இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்துள்ளனர்.
வண்டி வண்டியாக வைத்திருக்கும் பணத்தை ஓட்டுக்கு கொடுத்து, எப்படியாவது வெற்றி பெற நினைப்பர்.
எல்லாவற்றையும் வாங்கி கொண்டு, அவர்களின் செவியில் விசிலை ஊதி அனுப்புங்கள். நம்மை 'ஸ்மார்ட்' ஆக ஏமாற்றி கொள்ளை அடித்தனரே; அதேபோல் நாமும் ஸ்மார்ட்டா இந்த அரசுக்கு வேட்டு வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
@block_B@
கொளத்துார் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்யும்போது, அவரது வாகனத்துக்கு எதிரே, அந்த தொகுதியின் த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபு, ஒரு வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். ஆனால், அவர் பெயரை மறந்த விஜய், ''பிரபுவுக்கு ஓட்டு போடுங்கள்,'' என மாற்றி கூறி விட்டார்.block_B
@block_Y@
தேர்தல் கமிஷனுக்கு, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் அனுப்பியுள்ள கடிதம்: காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிக அளவில் சாலையில் கூடி, விஜய் பிரசார வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். இதனால், மொத்த பிரசாரத் திட்டமும் தாமதமாகிறது.
காவல் துறையின் மெத்தன நடவடிக்கையால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு, விஜய் பிரசாரம் பாதிப்படைகிறது. எனவே, இது குறித்து நேரடி விசாரணை மேற்கொண்டு, விஜய் பிரசாரத்துக்கு தேவையான பாதுகாப்பை வழங்க, சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜயை காண பொது மக்கள் அதிகமாக கூடுவதை, 'விஜய்க்கு மக்கள் ஆதரவை பாருங்கள்' என வீடியோ எடுத்து, த.வெ.க., நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், போலீசார் அலட்சியத்தால் மக்கள் கூடுவதாக கூறி, அதை தடுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு, த.வெ.க., புகார் அனுப்பி உள்ளது.block_Y
கிறுக்குத்தனமாக ஊரெல்லாம் காது கிழிய விசில் ஊதி மக்களை அவதிக்குள்ளாக்கும் வேலையை விஜய் செய்து வருகிறார்.
தமிழக அரசே விஜயை வளர்த்து உச்சாணிக் கொம்பில் கொண்டு வைத்து விடும். தேவையில்லாத வழக்குகள்.
அது சரி, ஒவ்வொரு வேட்பாளர் அறிமுகம் போதும் வெறும் கையை ஒன்றின் மேல் ஒன்றை வைத்து தடவிக் காண்பித்தார்களே அதற்கு என்ன அர்த்தம்? ஒண்ணும் இல்லமா பூடுவோம் என்றா?
தானாக திரளும் மக்களிடம் தவெக துண்டும் விசிலும் எவ்வாறு வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.
உனக்கு சங்கு ஊதிடுவாங்க
இந்த வெறித்தனமான ஆதரவாளர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்: நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது. பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள். அவர்கள் சமூக சேவைக்காக இங்கு வரவில்லை அங்கு அவர்கள் சிறிய தொகையைச் செலுத்தி, கறுப்புப் பணத்தில் பெரும் தொகையை அறுவடை செய்ய விரும்புகிறார்கள். இந்த நடிகர் தனது நடிப்புக்காக எழுத்துப்பூர்வமாகப் பணம் வாங்கியுள்ளார் தணிக்கையாளர் அறிக்கையில் வெள்ளைப் பணம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இவரோ தூய்மையான அரசியல் பற்றிப் பேசுகிறார்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எவருக்கும் இந்தத் தேர்தல் கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி அரசியலில் ஈடுபடவோ அல்லது இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணவோ கூடாது என்பதற்கு இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு இந்த நடிகர் மீண்டும் நடிக்கச் செல்வார், மேலும் அவர்களின் இரண்டாம் நிலை ஆட்கள், ஏதேனும் இருந்தால், தங்களின் முந்தைய தொழில்களைத் தொடர்வார்கள். சமூக ஊடகங்கள்/தொலைபேசி அழைப்புகளில் அவர்கள் செய்யும்
அனைத்து வசவுகளையும் நமது சைபர் குற்றப் பிரிவு கண்காணிப்பதால், அவரது ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஒரு முக்கியப் பிரச்சினை உள்ளது. அவர்கள் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும், மேலும் அவர்களின் பிரச்சினைகளிலிருந்து வெளிவர அவர்களின் கட்சியைச் சேர்ந்த எவரும் அவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள்.
விசில் அடிப்பது வழக்கமான செயல்.
Noise pollution
செவியில் விசில ஊதினா கண்ணம் வீங்கிடும் ஜாக்கிரதை