அத்துமீறிய மகனை கொன்ற தாய் கைது

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி, பி.கரடிப்பட்டியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன், 31. இவரது மனைவி வினோதினி, 25. இவர், கடந்த, 1ல், 'மணிகண்டனை காணவில்லை' என, வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், தகாத முறையில் நடக்க முயன்ற மணிகண்டனை, அவரது தாய் ஜோதி, கல்லால் அடித்து கொலை செய்து, பாக்கு தோப்பில் உடலை புதைத்தது தெரியவந்தது. போலீசார் ஜோதியை நேற்று கைது செய்தனர்.

தொடர்ந்து, உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement