தி.மு.க., மறந்து போன பள்ளி கல்வி துறை வாக்குறுதிகள்
பள்ளி கல்வி துறையை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு எனவும், சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. அவற்றின் விபரம்: சட்டசபை அறிவிப்புகள்:
* நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என, குறைந்தபட்சம் ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்
* வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மூன்றாம் பாடப்பிரிவு உருவாக்கப்படும்
* அனைத்து பள்ளிகளிலும், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்
* பிளஸ் 2 வரை படிக்கும், பார்வையற்ற மாணவர்களுக்காக மின்னுரு புத்தகங்கள் உருவாக்கப்படும்.
* நுாலக சேவை கிடைக்காத கிராமங்கள், நகரப் பகுதிகளில், நுாலக நண்பர்கள் திட்டத்தின் வாயிலாக, நுாலக சேவை வழங்கப்படும்
* குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர் மூவருக்கு, கவிமணி விருதுடன், 25,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்
* பொது நுாலக இயக்ககத்தின் கீழ் உள்ள, 1,926 கிளை நுாலகங்கள், 1,915 ஊர்ப்புற நுாலகங்களில், சர்வதேச நாளிதழ்கள், பருவ இதழ்கள் அனைத்தும், மின்நுால் சேவையாக வழங்கப்படும்
கடந்த 2021 தேர்தல் வாக்குறுதிகள்
* அரசியலமைப்பு சட்டத்தில், பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநில அரசு பட்டியலுக்கு மாற்றப்படும்
* அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியருக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்
* மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், '4ஜி, 5ஜி' இணையதள இணைப்பு, பதிவிறக்கம் செய்யும் வசதியுடன், கைக்கணினி வழங்கப்படும்
* அனைத்து கல்வி நிலையங்களிலும், 'வை - பை' வசதி செய்து கொடுக்கப்படும்
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஊட்டச்சத்து பெறும் வகையில், காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
* பகுதிநேர ஆசிரியர்களான, ஓவிய, இசை, உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
* அடிப்படை ஊதியம் 8,000 ரூபாயாக நியமிக்கப்பட்டு, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மற்ற ஆசிரியர்களைப் போல், காலமுறை ஊதியம் வழங்கப்படும்
* பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று, பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படும்
* கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய, ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட பாதிப்பிலிருந்து நிவாரணம் வழங்கப்படும்
* தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமித்து, எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்.
சூப்பர் சூப்பர் தமிழ் நாடு கோவேர்ந்மேன்ட் கிம் ஓகே .இனிமேல் விஜய் அண்ணா வோட்டை ஓகே
வட மாநில ஸ்கூலை விட்ட தமிழ்நாடு 100% மெல்...
அரசு பள்ளிகளில் டீச்சர்ஸ் பணியிடம் காலியாக இருக்கக்கூடாது 1,2 ,வகுப்புக்கு கேர் எடுக்கவேண்டும்
அவர் ரசிகர் மன்ற வேலையில் தீவிரமாக செயல்பட்டு அந்த கடமையை முடித்து விட்டு நேரமிருந்தால் பள்ளிக்கல்வி துறையை கவனிப்பார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துணை நடிகர் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர். இப்படி இருக்கையில் அவர் உதயநிதியின் வால் போல அவருடன் எப்போதும் இருக்கும்போது எப்படி அமைச்சராக வேலை பார்ப்பார். இது ஒரு வாரிசு.
இவற்றை திமுக வுக்கு ஓட்டு போடனும் என்று நினைப்பவர்கள் பார்த்து மாற்றிக் கொள்ள வேண்டும்.
கல்வியில் சிறந்த மாநிலம் என்று பெருமை பேசுவார்கள். இத்தனை வருடங்கள் ஆகியும் நிலை கட்டிடம் இல்லை. புதிய கட்டிடங்களும் இடிந்த விழுகிறது. நிறைய பள்ளிகளில் மாணவர்களே இல்லை. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அதிலும் ஊழல். அப்பறம் எப்படி விளங்கும். தனியார் பள்ளிகளில் காசு உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும். ஏழை மாணவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. இதுதான் கல்வியில் முன்னோடி மாநிலத்தின் லட்சணம்.