நல்ல நேரம் போயிரும்பா: திண்டுக்கல் சீனி பரபர
திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார், நேற்று மதியம் 12:35 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், உறுதிமொழி வாசித்துக்கொண்டு இருந்தபோது, அந்த தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளரான சீனிவாசன் உள்ளே நுழைந்து, 'நல்ல நேரம் முடிவதற்குள் என் மனுவை வாங்கிக் கொள்ளுங்கள்' என தேர்தல் அலுவலரிடம் கூறினார்.
உடனே, தி.மு.க., வேட்பாளர், 'நான் உறுதி மொழி வாசித்துக் கொள்கிறேன்' என்றார்.
அதற்கு சீனிவாசன், “அதெல்லாம் ஒன்றும் இல்லை தம்பி, நல்ல நேரம் முடிவதற்குள் நானும் மனுவை கொடுத்துக் கொள்கிறேன்,” என்றார். இதனால், 'அப்செட்' ஆன தேர்தல் அலுவலர், தன் தலையில் கைவைத்த படி நொந்து கொண்டார். தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் 'அப்செட்' ஆகி கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்.
பின், சீனிவாசன் சில நிமிடங்கள் காத்திருந்து மனுதாக்கல் செய்தார். இந்த களேபரங்கள் அனைத்தும், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் சதீஷா முன்னிலையில் நடந்தேறின. ஒருவர் வேட்பு மனு செய்யும் போது மற்றொரு வேட்பாளர் உள்ளே வரக்கூடாது என அவரோ, தேர்தல் அலுவலர்களோ, போலீஸ் அதிகாரிகளோ சுட்டிக்காட்டவில்லை.
இதுகுறித்து புகார் அளிப்பதாக, தேர்தல் அலுவலர் பழனிவேலு தெரிவித்தார்.
@block_B@ எஸ்.ஐ.,யை மிரட்டிய சீனிவாசன்
சீனிவாசனுடன் வந்த பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜான் கென்னடியிடம் கூடுதலாக ஆட்கள் அனுமதி இல்லை. வீடியோ பதிவில் தெரிந்தால் என் வேலை காலியாகிவிடும் என டி.எஸ்.பி., கார்த்திக் கூறினார். ஏற்க மறுத்த ஜான்கென்னடி டி.எஸ்.பி.,யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சீனிவாசனுடன் வந்த வழக்கறிஞரிடமும் விதிமீறல் என கூறி வெளியேறுமாறு டி.எஸ்.பி., கூறினார்.
ஆனால் ஜான்கென்னடி , வழக்கறிஞரை அலுவலகத்துக்குள் சீனிவாசன் அழைத்து வந்தார். டி.எஸ்.பி.,யோ செய்வதறியாது தவித்தார். அலுவலக நாற்காலியில் அமர போன சீனிவாசனிடம் எஸ்.ஐ., ஒருவர் வெளியேறுமாறு கூறினார். அவரிடம், 'இதோட போயிடுமா.. நீங்களும் இருப்பீங்க.. நாங்கள் இருப்போம் என கூற எஸ்.ஐ., நொந்துபோய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.block_B
திராவிட ஞானஸ்தர்கள், நல்ல நேரத்துக்காக சட்ட மீறல், விதி மீறல், காவலதிகாரியையே மிரட்டல் என்று எல்லா அட்டூழியமும் செய்வாரா, போலீஸ் வேடிக்கை பார்க்கும்
Dravidam...good that BJP took such allianceமேலும்
-
100 கோடி அமெரிக்க டாலர், அழகான பெண் : துருக்கியிடம் கேட்கிறார் உகாண்டா ராணுவ தளபதி
-
உயர் ரத்த அழுத்தம்: மருத்துவ விடுப்பில் சென்றார் டேவிட்சன்
-
ஆரத்தி தட்டில் பணம் போட்டவர் மீது வழக்கு
-
பஸ் ஸ்டாண்டில் வெளிச்சம் இல்லாத ஹைமாஸ் விளக்கு
-
சித்திரை கனி: சூடு பிடிக்கும் விற்பனை
-
சிறுமிக்கு தொல்லை தொழிலாளி கைது