கார்த்தி எம்.பி., பேச்சு: கடுப்பில் கருணாஸ்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அ.ம.மு.க., சார்பில் தேர்போகி பாண்டி, காங்., சார்பில் மாங்குடி, த.வெ.க., சார்பில் டாக்டர் பிரபு, நா.த.க., சார்பில் சீமான் போட்டியிடுகின்றனர். சிவகங்கையில் தி.மு.க., கூட்டணியில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.
காங்., வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக தேவகோட்டை மற்றும் புதுவயலில் நடந்த தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், காங்., - எம்.பி., கார்த்தி பேசுகையில், 'சீமான் வெளியூர்காரர். அவருக்கு விபூதி பூசி அனுப்பி வைத்து விடுங்கள்' என்று கூறினார்.
அவரது பேச்சு, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'சீமான் வெளியூர்காரர் என்றால், கருணாசும் வெளியூர்தானே; அப்படியானால் அவரையும் நிராகரிப்பீர்களா' என, அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.
ஏற்கனவே சிவகங்கை தொகுதியை தங்களுக்கு ஒதுக்காத எரிச்சலில் உள்ள காங்., கட்சியினரும் தி.மு.க.,வினரும், கருணாசின் தேர்தல் பிரசார பணிகளில் அக்கறை காட்டவில்லை. வேறு வழியின்றி கருணாசும் தொகுதியில் தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கருணாஸ் டெபாசிட் வாங்குவதே கஷ்டம்தான்.
செட்டிநாடு அடங்கியுள்ள சிவகங்கை மாவட்டத்தில் மண்ணின் மைந்தர்களுக்கே ஒட்டு ...
மிக நல்ல முடிவு.
ஆமாங்க நாங்க ரொம்ப நல்லவங்க??
சாதி மதம் பார்த்து வாக்கு செலுத்தமாட்டோம் என்கின்றனர் நகரத்தார்.
கருணாஸ் டிபாசிட் வாங்குவதே கடினம்.த வே க , சீமான் சுமார் 60000 வாக்குகளை பெற்று விடுவார்கள். ,கருணாஸ் படு தோல்வி அடைவார். அண்ணா தி மு க வின் செந்தில்நாதன் வெற்றி பெறுவார்.
என்ன தான் திமுக ஓட்டுக்காக 5000 ரூபாய் அரசுபணத்தை அள்ளி வீசி தைரியமாக இருந்தாலும். எல்லா தொகுதிகளிலும் உள்ளடி வேலைகளால் நிச்சயமாக தோற்றுவிடும்.
இவரெல்லாம் சட்ட சபைக்கு போய் என்ன செய்ய போறாரு , பேசாம வீட்டுக்கு anuppunga.
காங்கிரஸ் சார்பில் ஒருத்தர், திமுக கூட்டணியில் உள்ள கருணாஸ் ஒருத்தர். இதெல்லாம் என்ன கூட்டணி.
நன்றாக படி உடன் பிறப்பே...காரைக்குடியில் மாங்குடி... சிவகங்கையில் கருணாஸ்...இரண்டும் வெவ்வேறு தொகுதிகள்... இதுதான் திருட்டு திராவிடர் தமிழ் வளர்த்த லட்சணம்....மேலும்
-
பெரிய நாயகி அம்மன் கோயிலில்ஏப்., 20 ல் கும்பாபிேஷகம்
-
சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை: எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு
-
மகன் இறப்பில் சந்தேகம்: தாய் எஸ்.பி.,யிடம் புகார்
-
எஸ் கரிசல்குளம் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
-
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
-
முதியோர் பென்ஷன் பெறுவோரிடம் வாழ்வுரிமை சான்றுக்கு வசூல் : சிவகங்கையில் சங்கங்கள் மீது புகார்