மதுரையை கோட்டைவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்; புலம்பி தவிக்கும் தோழர்கள்

6

ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், தனியாகவோ, கூட்டணியிலோ, மதுரை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் களமிறங்குவது வழக்கம். கடந்த 1952ல் முதல் தேர்தலில், கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவரான ராமமூர்த்தி, சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வென்றார். சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் வெற்றி பெற்ற மதுரையில், அக்கட்சிக்கு இன்றும் அடிப்படை பலம் உள்ளது.

ஆனால், இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், மா.கம்யூ.,வுக்கு மதுரையில் தொகுதியே ஒதுக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் ஏழு இடங்களில், தி.மு.க.,வே நேரடியாக களம் இறங்குகிறது. மதுரை தெற்கு தொகுதி, ம.தி.மு.க.,வுக்கும் மேலுார் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகள், காங்.,கிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021ல், மா.கம்யூ., போட்டியிட்ட திருப்பரங்குன்றத்தில், தி.மு.க.,வே களமிறங்குகிறது.

இந்நிலையில், 60 ஆண்டுகளுக்கு பின், மதுரை மாவட்டத்தில், ஒரு தொகுதியில் கூட மா.கம்யூ., போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மார்க்சிஸ்ட் தோழர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

Advertisement