போதைப்பொருட்களை கட்டுப்படுத்தாத தி.மு.க., : ஏ.சி.சண்முகம் பேச்சு

திண்டுக்கல்: ''தி.மு.க., அரசு போதை பொருட்களை கட்டுப்படுத்தாததால் தமிழக குடும்பங்களின் பொருளாதாரம் பாதித்துள்ளது'' என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேசினார்.

திண்டுக்கல் அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன் அறிமுக கூட்டம் மணிக்கூண்டில் நடந்தது. அவரை ஆதரித்து சண்முகம் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.400 கோடியில் மருத்துவக் கல்லுாரி திண்டுக்கல்லுக்கு கிடைத்துள்ளது. சீனிவாசனின் புகழையும், அன்பையும் நினைத்து பார்த்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.

வாஜ்பாய் ஆட்சியில் தி.மு.க., பங்கு பெறவில்லையா. பா.ஜ.,வுடன் தி.மு.க., சேர்ந்தால் அது கூட்டணி. அதி.மு.க., சேர்ந்தால் அது அடிமைத்தனமா. சாதாரண மக்கள் இதை ஏற்பார்களா. அ.தி.மு.க.,வை யாராலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.

தி.மு.க., அரசு போதை பொருட்களை கட்டுப்படுத்தாததால் தமிழக குடும்பங்களின் பொருளாதாரம் பாதித்துள்ளது. இந்நிலை மாற மக்கள் சீனிவாசனை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.

Advertisement