பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு


தர்மபுரி : தர்மபுரி டவுனில், பதற்றமான இலக்கியம்பட்டி மற்றும் அன்னசாகரம் ஓட்டுச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில், 5 சட்டசபை தொகுதிகளிலுள்ள, 1,601 ஓட்டுசாவடிகளில், 130 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு துணை ராணுவத்தினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், 1,601 ஓட்டுசாவடிகளிலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தர்மபுரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட


இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அன்னசாகரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களை கலெக்டர் சதீஸ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி, சுதந்திரமாக ஓட்டுபோடுவதை தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள், போலீசார் உறுதிசெய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இதில், நகராட்சி கமிஷனர் வசந்தி, தாசில்தார் சுகுமார், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement