தி.மு.க. வேட்பாளர் தேர்வில் வியப்பு
திருப்பூர்:திருப்பூர் தெற்கை மேயராக இருந்த தினேஷ்குமாருக்கும், பல்லடத்தை எம்.எல்.ஏ. செல்வராஜூக்கும் ஒதுக்கியது, தி.மு.க.வினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளராக காங்கயம் தொகுதியில் அமைச்சர் சாமிநாதன்; பல்லடத்தில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ்; திருப்பூர் தெற்கில் மேயர் தினேஷ்குமார், அவிநாசியில் மருத்துவர் கோகிலாமணி; தாராபுரத்தில் மருத்துவர் இந்திராணி; மடத்துக்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன்; உடுமலையில் நகராட்சி கவுன்சிலர் ஜெயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுகிறார். வடக்கு தொகுதியில் கூட்டணிக்கட்சியான இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி போட்டியிடுகிறார்.
அமைச்சர் சாமிநாதனுக்கு கடும் போட்டிக்கு நடுவே, மீண்டும் காங்கயம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தொண்டாமுத்துாரில் களம் கண்ட கார்த்திகேய சிவசேனாபதி இத்தொகுதியை பெற முனைந்தார். இருப்பினும் அமைச்சர் என்பதால் சாமிநாதனுக்கு 'சீட்' வழங்கப்பட்டது. இந்த முறை போட்டிக்களமும் சாமிநாதனுக்கு கடுமையானதாக மாறியுள்ளது.
திருப்பூர் தெற்கில் மேயராக இருந்த தினேஷ்குமார் போட்டியிடுகிறார். தெற்கு தொகுதி அடங்கிய மத்திய மாவட்டத்தின் செயலாளரும், இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான செல்வராஜூக்கு பல்லடம் தொகுதியில் 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி, செந்தில் பாலாஜி ஆகியோர் பரிந்துரையும் தெற்கு தொகுதிக்கு தினேஷ்குமார் பெயரை கட்சி தலைமை அறிவிக்க காரணமாக அமைந்தது.
தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.வுக்கு ஒதுக்கப்பட்டவுடன், ெசல்வராஜ் தனக்கு தெற்கு ேவண்டும் என அடம் பிடித்தார். அவர் முன்னர் கேட்ட பல்லடம் தொகுதியை அவருக்கு கட்சி தலைமை ஒதுக்கியது. பல்லடம், அ.தி.மு.க. கோட்டையென்பதால் செல்வராஜூக்கு சிக்கல் எழுந்துள்ளது.
அவிநாசியில் இளம் மருத்துவர் கோகிலாமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்தொகுதியில் அருந்ததியர் வகுப்புக்கு உள்ளூரைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற அடிப்படையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், இங்கு போட்டியிடுவார் என எதிர்பார்த்த அந்தியூர் செல்வராஜூக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. கட்சி குடும்பத்தைச் சேர்ந்த, மருத்துவராகவும், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவராகவும் உள்ள மருத்துவர் இந்திராணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மடத்துக்குளம் தொகுதியில் ஒரு முறை வெற்றியும் ஒரு முறை தோல்வியையும் தழுவிய ஜெயராமகிருஷ்ணனுக்கு எதிர்பார்த்தது போல் அதே தொகுதி மீண்டும் கிடைத்துள்ளது. நகராட்சி கவுன்சிலர் என்பதோடு, கட்சியின் இளைஞர் அணிக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், ஜெயகுமார்உடுமலை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
திருப்பூர் வடக்கில் மூன்றாவது முறையாக களம் காண்கிறார் இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி. கடந்த முறை உடுமலையில் காங். போட்டியிட்டது. இந்த முறை தி.மு.க.வே போட்டியிடுகிறது. இதனால் இந்த முறை மாவட்டத்தில் காங். களம் காணவில்லை.
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு