கேன்சருக்கு ஜோதிடத்தில் சிகிச்சை: த.வெ.க. வேட்பாளர் 'கிச்சு கிச்சு'

கவுண்டம்பாளையம்: கேன்சரைக் குணப்படுத்த முடியும் என்று யாராவது சொன்னால், 'ஆமாம் மருத்துவ அறிவியல் வளர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்' என்றுதானே நீங்கள் சொல்வீர்கள்.

ஆனால், ஜோதிடத்தால் 100 சதவீதம் குணப்படுத்த முடியும் என, ஒருவர் சொன்னால், அவரை டாக்டர் என்பீர்களா, ஜோதிடர் என்பீர்களா.

அப்படி இரண்டும் கலந்த ஒரு புதுமையான மருத்துவ - ஜோதிடர்தான் கனிமொழி. கவுண்டம்பாளையத்தின் த.வெ.க., வேட்பாளர்.

“ஜோதிடத்தின் உதவியால் நோய்களைக் குணப்படுத்த முடியும். ஆனால், அந்தக்காலத்தில் நோய்கள் அதிகம் இல்லை. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, மகளிருக்கு பி.சி.ஓ.டி., என அனைத்தையும் ஜாதகத்தைப் பார்த்து குணப்படுத்தலாம்.

ஏன், கேன்சரில் இருந்து கூட தப்பிக்கலாம் என்பது ஜோதிடம் சொல்லக்கூடிய 100 சதவீதம் உண்மை” என்றெல்லாம் இவர், இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

தன்னை புகழ்பெற்ற மருத்துவ ஜோதிடர், டாக்டர் என்றெல்லாம் குறிப்பிட்டுக்கொள்ளும் இவர், எம்.பி.பி.எஸ்., டாக்டர் இல்லை என்பதுதான் ஹைலைட்டே!

சோஷியல் மீடியாவில் இதைக்கிண்டல் செய்து, த.வெ.க.,வை மற்ற கட்சியினர் கலாய்ப்பதுதான் டிரெண்ட்.

Advertisement