பன்னீர்செல்வத்தின் சொத்து ரூ. 12.11 கோடி

தேனி: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 12.11 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போடி சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

நேற்று அவர் மனுதாக்கல் செய்த அவர், தனது அசையா சொத்து மதிப்பு ரூ. 9.17 கோடி என குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்தாக 216 கிராம் தங்கநகை, 5 வாகனங்கள் உட்பட ரூ.2.94 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மூத்த மகன் ஜெயபிரதீப்பிடம் ரூ. 1.89 கோடி, மற்றொரு மகன் ரவிந்திரநாத்திடம் ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.5.40 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட போது அசையும் சொத்தாக 16 கிராம் தங்க நகை, 6 வாகனங்கள் உட்பட ரூ. 1.11 கோடி, அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 4.12 கோடி, கடன் ரூ. 1.52 கோடி என குறிப்பிட்டிருந்தார்.

Advertisement