அடிப்படை வசதிகள் கோரும் 28 கிராமத்தினர்

தேனி:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் உள்ள 28 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்டகாலமாக தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்தினர் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு மேலாக வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான முக்கிய ரோடு சீரமைக்கப்படவில்லை, 28 கிராமங்களுக்கும் இணைப்புரோடு அமைத்து கொடுக்கப்படவில்லை, தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் அலைபேசி டவர்கள் அமைக்கப்படவில்லை. வீடுகளை பராமரிக்க, விவசாயம் செய்ய முடியாமல் வனத்துறையினரின் நெருக்கடி அதிகரித்துள்ளது. கிராமங்களில் விடுபட்டவர்களுகக்கு பட்டா வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றனர்.

Advertisement