புதுச்சேரியில் ரூ. 1,250 கோடியில் ஐ.டி., பார்க் ;பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் தகவல்
புதுச்சேரி: மணவெளி தொகுதி இடையார்பாளையத்தில் பா.ஜ., தேர்தல் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், புதுச்சேரியில் 2, 700 கோடியில் புதிய திட்டம் துவங்க இருக்கிறது என, தேசிய தலைவர் நிதின் நபின் பேசினார்.
புதுச்சேரி மணவெளி தொகுதி, பா.ஜ.,சார்பில் தேர்தல் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலுார் சாலை இடையார்பாளையம் திடலில் நேற்று மாலை நடந்தது. புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் மன்சூர் மாண்டவியா, மணவெளி தொகுதி பா.ஜ., வேட்பாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் பேசியதாவது;
விவசாயிகளுக்கு முன்னேற்ற திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, சுற்றுலா என, பல விரிவான திட்டங்களை மத்திய அரசு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த காங்., ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியது. பெண்களுக்கு முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் பல மாற்றங்களை செய்துள்ளது.
மக்கள் வரி பணம் நேரடியாக மக்களுக்கு செல்லும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. காங்., ஆட்சியில் மருந்து வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். அதற்காக பா.ஜ., ஆட்சியில், குறைந்த விலையில் மக்கள் மருந்தகம் கொண்டு வந்து இயங்கி வருகிறது.
தே.ஜ., கூட்டணி ஆட்சி வந்த பின், நிவாரணமாக விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. 80 வயது நிறைவடைந்த முதியவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு நிவரண தொகை 8 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்த போது, 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயில் புதிய திட்டங்களை அறிவிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 436 கோடி ரூபாயில் மேம்பாலம் திட்டம் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் 491 ரூபாயில் வளர்ச்சி திட்டம் துவங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் 1,250 கோடி ரூபாயில் ஐ.டி., பார்க் வர இருக்கிறது.
சுற்றுலாத்துறை வளர்ச்சியடைய மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆரோவில் பெரிய அளவில் சுற்றுலா திட்டம் துவங்கப்பட இருக்கிறது.
புதுச்சேரியில் தொழிநுட்பம் என பல வளர்ச்சியை பாதையை கொண்டு செல்வது எங்களின் இலக்காக உள்ளது. மணவெளி தொகுதியில் பா.ஜ., வில் போட்டியிடும் வேட்பாளர் செல்வத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
ராமேஸ்வரம் சாலை ஓரத்தில் தெர்மாகோல் கழிவு குவியல்
-
தி.மு.க.,வினர் ரூ. 200 பட்டுவாடா; குறட்டை விடும் பறக்கும் படை
-
சீமைக்கருவேலம் காடாகும் சக்கரக்கோட்டை கண்மாய்: துார்வாரி ஆழப்படுத்த கோரிக்கை இங்கு வந்து செல்லும் பறவைகளும் பாதிப்பு
-
நாய், நரி, பூனையை பார்த்திருப்பர்; புலியை இப்போது தான் பார்க்கின்றனர்: காங்-., மீது சீமான் பாய்ச்சல்
-
தி.மலை - நரசப்பூர் சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு
-
செயலிழந்த நிலையில் உழவர் சந்தைகள் மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்