தி.மலை - நரசப்பூர் சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு
சென்னை: திருவண்ணாமலை - ஆந்திர மாநிலம் நரசப்பூர் சிறப்பு ரயில், மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை:
ஆந்திர மாநிலம், நரசப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புதன் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், இன்று முதல் மே 27ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து நரசப்பூருக்கு வாரந்தோறும் வியாழ கிழமை களில் இயக்கப்படும் சிறப்பு ரயில், நாளை முதல் மே 28ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது
நரசப்பூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் கர்நாடக மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு இயக்கப் படும் சிறப்பு ரயில், வரும் 10 முதல் மே 29ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்
எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வாரந்தோறும் சனிக் கிழமைகளில் இயக்கப் படும் சிறப்பு ரயில், வரும் 11 முதல் மே 30ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா