நாய், நரி, பூனையை பார்த்திருப்பர்; புலியை இப்போது தான் பார்க்கின்றனர்: காங்-., மீது சீமான் பாய்ச்சல்
சென்னை: சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளில் நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் எத்தனை முறை தோல்வியை கண்டாலும், போராட்டத்தை கைவிடவில்லை. மூன்று, நான்கு சீட்டுக்காக முழங்காலிட்டு யாரிடமும் காத்திருக்கவில்லை. அரசியல் இங்கே வியாபாரமாகி விட்டது.
ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் நிலைப்பாட்டை எதிர்த்து கட்சி தொடங்கி விட்டு, பின், அவர்களுடனே கூட்டணி வைத்து, அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், லஞ்சமும் ஊழலும் திளைக்கும் என்கிறார்கள். அ.தி.மு.க., வந்தால் மட்டும், நேர்மை மட்டுமே இருக்குமா; மீண்டும், இருவரும் சேர்ந்து கொள்ளையடிப்பர்.
காரைக்குடி தொகுதியில், நான் போட்டியிடுவது பற்றி, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
அவர்கள் இதுவரை நாய், நரி, பூனையை பார்த்திருப்பர். புலியை, இப்போது தான் பார்க்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு, என்னை பார்த்து நடுக்கமும் பயமும் ஏற்பட்டுள்ளது.
த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல் என்னவென்றே எனக்கு தெரியாது. அடக்குமுறைகளுக்கு அஞ்சக்கூடாது. அனுமதி தராவிட்டாலும் மீறி வந்து, பிரசாரம் செய்ய வேண்டும். அடக்குமுறை, ஒடுக்குமுறையை மீறி நிற்க வேண்டும். விஜயின் அரசியல் என்னை பாதிக்காது.
நான் திரையில் இருந்து வந்து, கட்சி தொடங்கி ரசிகர்களை பார்க்கவில்லை. சிறையில் இருந்து வந்து கட்சி தொடங்கி, மக்களை சந்திக்கிறேன்.
எனக்கு ஓட்டு போடுபவர்கள், காற்றில் பறக்கும் புதர்கள் அல்ல; புயலே வந்தாலும் வீரியத்துடன் இருக்கும் நெல்மணிகள். இவ்வாறு அவர் பேசினார்.
இவரு புலியா, அதெப்புட்றா கொஞ்சம் கூட அசராம அள்ளி உடுறீங்க. திமுக எதிர்ப்பு வாக்குகள் பல்க்காக அதிமுக பக்கம் சென்று விடாமல் தடுக்க கட்டுமர கம்பெனியின் பைனான்சில் நடத்தப்படும் கமிஷன் ஏஜென்சி நாம் தமிழர் கட்சி. ஆமைக்கறி, அப்பத்தான்னு பெனாத்திக்கிட்டு இருந்த நீ இப்போ புலியா. நாங்க உன்னை புலிகேசியாத்தான் பார்க்குறோம்.
புலியா இல்ல புளியா?
He is a public entertainer. Nothing but a COURT JESTLER who used to enact skits to keep the KING/SUBJECTS happy.
If the younger generation vote for him on his chatter box promises, they woukd be digging their own graves
ராகுல் வயநாட்டில் வந்து போட்டியிடுவாராம் ஆனால் சீமான் காரைக்குடியில் போட்டியிட்டால் வெளியூர்க்காரராம். அப்பாவின் தயவில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் கார்த்திக் சிதம்பரம் கூறுகிறது. சீமான் பேசும் அனைத்து உயிர்களுக்குமான அரசியலை வேறு யாராலும் பேச முடிகிறதா? அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிகிறதா? அது முடியாததால் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை செய்கின்றனர் இந்த திருட்டு பயலுகள் . இலவசங்களை கொடுத்து இன்றைக்கு மக்களையும் கரப்ட் ஆக மாற்றி வைத்திருக்கிறது இந்த திராவிட கூட்டம்.
தேர்தலுக்கு தேர்தல் திமுககாரனுக பெங்களூரில் உள்ள விஜயலெட்சுமி அக்காவை சைமனுக்கு எதிரா தூண்டிவிட்டு அசிங்கமா பேச வைப்பாங்க இந்த தடவை தேர்தலும் நெருங்கிருச்சு இன்னும் விஜயலெட்சுமி அக்கா வாயைத் திறக்காம இருக்காங்களே ஏன்னு தெரியல ஒருவேளை தேர்தலுக்கு முதல்நாள் டேய் சீமான் என்று திட்டி வீடியோ வெளியிடலாம் பொறுத்திருந்து பார்ப்போம்!
சீமான் அண்ணாச்சி, காங்கிரஸ் இலங்கை விடுதலைப்புலிகளுக்கு வேட்டு வைத்தவங்க, அப்போ எங்கே போனீங்க தமிழ் மக்களுக்காக,
ஆமைக்கறி, மான் ஊறுகாய். இனி புலி பிரட்டலா?