ராமேஸ்வரம் சாலை ஓரத்தில் தெர்மாகோல் கழிவு குவியல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தெர்மாகோல், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பாம்பன் பாலம் முதல் ராமேஸ்வரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறத்திலும் குப்பையை குவித்து தீவைப்பதால் புகை பரவி துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தெர்மாகோல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
இவை அப்பகுதியில் உள்ள படகு இன்ஜின் இலை தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள்.
இக்கழிவுகளை ஊராட்சி துப்புரவு ஊழியர்கள் சேகரிக்காததால், ஆலை ஊழியர்கள் கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். சுகாதாரக்கேடான கழிவுகளால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அருவருப்படைகின்றனர்.
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை