சைபர் கிரைம் மோசடி;2 வாலிபர்கள் கைது

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் கமிஷனுக்கு வங்கி கணக்குகளை பெற்று சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி 37. இவரது வங்கி கணக்கில் அதிக பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அப்போது எமனேஸ்வரம் கிஷோர் 25, அழகனுார் கேசவன் 27, ஆகியோரிடம் வங்கி கணக்கு விவரங்களை பாண்டி கமிஷனுக்கு கொடுத்தது தெரிந்தது.

கிஷோர், கேசவன் வங்கி கணக்குகளை கமிஷனுக்கு பெற்று சைபர் மோசடி கும்பலிடம் வழங்கி பணம் பெற்றதும் தெரிந்தது. இதையடுத்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement