மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அன்னூர்: குன்னத்தூர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குன்னத்தூரில், பல நூறு ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி மாலை முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது.
இதையடுத்து விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 10: 00 மணிக்கு, விமான கோபுரம், விநாயகர், அன்னை மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
ஓதிமலை, சுந்தர சிவனேச அடிகள் அருளாசி வழங்கினார். கணேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேள்வி பூஜை நடத்தினர். அம்மனுக்கு தசதானம், தச தரிசனம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. மண்டல பூஜை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு