உழவர்கரை தொகுதியில் பிரபாதேவி வீரராகு பிரசாரம்

புதுச்சேரி: ​உழவர்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி வீரராகு, தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.

அப்போது செல்லும் இடங்களில் பொதுமக்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.வேட்பாளர் பிரபாதேவி வீரராகு நேற்று உழவர்கரை தொகுதி ஜே.ஜே.நகரில் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் ் பேசுகையில், உழவர்கரை தொகுதியில் துாய்மையான குடிநீர் தடையின்றி வழங்கப்படும், தரமான சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக துார்வாரப்பட்டு சுகாதாரமான சூழல் உறுதி செய்யப்படும். பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ப்படும். கல்லுாரி , பஸ் நிலையங்கள் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

​தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படும். இதற்கு தொகுதி மக்கள் காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டுபோட்டு வெற்றி பெற செய்ய கேட்டுக் கொண்டார்.

Advertisement