சாரதா கங்காதரன் கல்லுாரியில் 'கிக் ஸ்பார்க்' நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி, சாரதா கங்காதரன் கல்லுாரியின் கணினி அறிவியல் துறை சார்பில் மாணவர்களின் தனித்திறமைகள், தொழில்நுட்ப திறமைகளை வெளி கொண்டுவர கிக் ஸ்பார்க் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் வினாடி வினா, பேப்பர் பிரசன்டேஷன், டீபக்கிங், போட்டோகிராபி, பேஸ் பெயிண்டிங், கனெக்க்ஷன் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் 22 கல்லுாரிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மாணவ, மாணவிகள் தங்களின் புது யோசனைகளை மென்பொருளாக செய்து காட்டும் தொழில்நுட்ப போட்டி நடப்பட்டு, முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

கல்லுாரியின் முதல்வர் பாபு பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார். இப்போட்டியின் இறுதியில் ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டத்தை மணக்குள விநாயகர் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் பெற்றனர்.

Advertisement