ஆதித்யா கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் துவக்க நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா கல்லுாரியில் 2026-27ம் கல்வியாண்டிற்கான கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஆதித்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்தன், வித்ய நாராயணன் அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் அருணா வரவேற்றார். நிகழ்ச்சயில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கல்வியில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் ஆதித்யா கல்லுாரி நிறுவனம். இந்தாண்டு சி.ஏ., சி.எம்.ஏ., பவுண்டேசன் தேர்வுகளில் 169 மற்றும் 110 மாணவர்கள் தகுதி 1 மற்றும் 2 தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் எச்.சி.எல் டெக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வகுப்புகள் மூலம் 133 மாணவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவுகளான பி.காம்.,ஜெனரல், புரபொஷன் அக்கவுண்டிங், கார்ப்பரேட் செகரட்டரி ஷிப், பி.ஏ., ஆங்கிலம், இளங்கலை அறிவியல் பி.எஸ்.சி., ஏ.ஐ., கணினி அறிவியல் மற்றும் மிஷன்லேர்னிங், டேட்டா சயின்ஸ், கம்பியூட்டர் சயின்ஸ், மல்டி மீடியா, பி.எஸ்.சி., பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, லைப் சைன்ஸ் ஆகிய துறைகளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பிணை பயண்படுத்தி மாணவர்கள், ஆதித்யா கல்லுாரியில் சேருமாறு கல்லுாரி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Advertisement