வருவாய்த் துறையினருக்கு 'மீல்ஸ்'; போலீசாருக்கு பட்ட சாதம்
திண்டிவனம்: தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறையினர் தரமான ஓட்டல்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சாப்பாட்டை சாப்பிட்ட நிலையில் போலீசாருக்கு பட்டை சாதம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சூடு பிடித்து, பிரதான கட்சி வேட்பாளர்கள் பலர் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 30ம் தேதி மனு தாக்கல் துவங்கியது. நேற்று 6ம் தேதி கடைசி நாளாக பிரதான கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இதற்காக சப் கலெக்டர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, போலீசார் என 25க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரசாரம், ஊர்வலத்தில் அரசியல் கட்சியினருடன் வந்த தொண்டர்களுக்கு சுடச்சுட அசைவ பிரியாணி வழங்கி வேட்பாளர்கள் தரப்பில் குஷிப்படுத்தப்பட்டது.
தேர்தல் பணியில் உள்ள வருவாய்த் துறையினருக்கு தரமான ஓட்டல்களிலிருந்து உணவு வழங்கப்பட்டது.
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பணியில் உள்ள போலீசாருக்கு நல்ல தரமான ஓட்டல்களிலிருந்து மதிய உணவு வழங்காமல், சாதாரண ஓட்டல்களில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் புளி சாதம், தயிர் சாதம், சாம்பர் சாதம், வெஜ் பிரியாணி என பட்டை சாதம் பொட்டலம் வழங்கப்பட்டது.
பசி ருசியறியாது என்பது போல் பசி நேரத்தில் ஜீப்பில் கொண்டு வரப்பட்ட பட்டை சாதத்தை சாப்பிட்டு பசியாறினர்.
மேலும்
-
வங்கதேசம் போராட்டத்தை துாண்டியதாக முன்னாள் சபாநாயகர் கைது
-
லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேரை கைது செய்தது காஷ்மீர் போலீஸ்
-
மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க மனித சங்கிலி அமைக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு
-
20 மணி நேரத்தில் சரணடைய டிரம்புக்கு கெடு விதித்தது ஈரான்
-
பவுஞ்சூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுவது எப்போது ?
-
சிலிக்கான் மண் எடுக்க தடை விதிக்க கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு