பவுஞ்சூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுவது எப்போது ?
செய்யூர்:பல ஆண்டுகளாக பழுதடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் பவுஞ்சூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுவது எப்போது என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
பவுஞ்சூர் வட்டார வேளாண் துறைக்கு உட்பட்டு அம்மனுார், செங்காட்டூர், அணைக்கட்டு, கொடூர், முகையூர், செம்பூர், தொண்டமநல்லுார் உட்பட 41 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலப்பரப்பு கொண்டுள்ளது.
நெல், வேர்கடலை, தர்பூசணி உள்ளிட்டவை பருவத்திற்கு ஏற்றதுபோல பயிரிடப்படுகின்றன.
விவசாயிகள், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை வாங்க, பவுஞ்சூரில் செயல்படும் வேளாண்மை அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
வட்டார வேளாண் விரிவாக்க மையம் செயல்படும் கட்டடம் 1968 ம் ஆண்டு கட்டப்பட்டது. நாளடைவில் பழுதடைந்து , மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்கள், விவசாயிகள் சம்மந்தப்பட்ட கோப்புகள் சேதமடைவதாக கூறப்படுகிறது.
மேலும் போதிய இடவசதி இல்லாததால், விவசாயிகளுக்கு ஆலோசனை, பயிற்சி வழங்குதல், கூட்டங்கள் நடத்த வேளாண்துறை அதிகாரிகள் மாற்று இடத்தை நாடி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
விரிவு படுத்தப்பட்ட புதிய வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகையால் வேளாண், தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை என அனைத்து விவசாய துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
கடும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகளில் விநியோகிக்க கோரிக்கை
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்