20 மணி நேரத்தில் சரணடைய டிரம்புக்கு கெடு விதித்தது ஈரான்
டெஹ்ரான்:அமெரிக்கா 20 மணி நேரத்தில் சரணடையாவிட்டால், அதன் நட்பு நாடுகள் கற்காலத்துக்கு செல்லும் என்று ஈரான் அதிரடியாக எச்சரித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விதித்திருந்த கெடு நெருங்கிவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது உட்பட 15 அம்ச திட்டத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் கற்காலத்துக்கு செல்லும் அளவுக்கு மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார்.
ஆனால் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாத ஈரான், தற்போது டிரம்புக்கே பதில் கெடு விதித்துள்ளது. ஈரான் சபாநாயகரின் முக்கிய ஆலோசகரான மஹ்தி மொஹம்மதி, 'டிரம்ப் ஈரானிடம் சரணடைய 20 மணி நேரம் அவகாசம் தருகிறோம். இல்லையெனில் அவரது நட்பு நாடுகள் கற்காலத்துக்கு அனுப்பப்படும். நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்' என, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும்
-
இந்தியா -- நியூசிலாந்து ஒப்பந்தம் 24ம் தேதி நிறைவேற வாய்ப்பு
-
ஏர் இந்தியா சி.இ.ஓ., கேம்பெல் வில்சன் விலகல்
-
போரால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ரூ.2.50 லட்சம் கோடி கடன் உத்தரவாதம்; மத்திய அரசு பரிசீலனை
-
முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை 4% சரிவு
-
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு.. தீர்வு வருமா?. இடத்தை அளவிட குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.45 கோடியில் குடிநீர் திட்டத்தை முதல்வர் திறந்தும்.. பயனில்லை! 9 ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்