தி.மு.க., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே உள்ள கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் நேற்று ஓட்டு சேகரித்தார்.

வாணாபுரம் அடுத்த ஈருடையாம்பட்டு கிராமத்தில் முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்தும், பொதுமக்களுடன் இணைந்து மேளம் அடித்தவாறும் ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், 'கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்திற்கென ஏராளமான திட்டங்களை அமல்படுத்தினார்.

திட்டங்கள் தொடர மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைமுருகன், வி.சி., மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும், இளையனார்குப்பம், புஷ்பகிரி, பெரியக்கொள்ளியூர், வடமாமாந்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisement