ரூ.90 கோடியில் அதிநவீன பால் பண்ணை எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு
ராசிபுரம்: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உத்திரகிடி-காவல் ஊராட்சி, நரசிம்மன்காட்டில், தி.மு.க., தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. வேட்பாளர் பூமலர் பொன்னுசாமியை ஆத-ரித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் ராஜேஸ்-குமார் எம்.பி., பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில், நாமக்கல்லில், 90 கோடி ரூபாயில், அதிந-வீன பால்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. சேந்தமங்கலம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்.,களில் நிலவி வந்த குடிநீர் பிரச்னையை தீர்க்க, 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொல்லிமலை பகு-தியில் வசிக்கும் மக்களின் நலனுக்காக புதிய ரத்த வங்கி அமைக்-கப்பட்டுள்ளது. மேலும், 38 கோடி ரூபாயில், கூலிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை நாமக்கல்-துறையூர் சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளன.கொல்லிமலை மிளகுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. சேந்தமங்கலத்தில் இளை-ஞர்களுக்காக, புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்-பட்டுள்ளது. கொல்லி மலை மலைவாழ் மக்களுக்கு, 8,000 பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்-ளது. எருமப்பட்டி டவுன் பஞ்., கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், 3.80 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்-றன.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக- உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்-தொகை, 2,000 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உத-வித்தொகை, 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும். முக்கியமாக பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்-முதல் விலை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்தப்படும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பூமலர் பொன்-னுசாமியை வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் ராணி, டவுன் பஞ்., செயலாளர்கள் தனபாலன், முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்த்பாபு உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும்
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
-
கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
-
போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்