தி.கோட்டில் ரூ.2,000 கோடியில் திட்டங்கள் உதயசூரியனுக்கு ஓட்டுகேட்டு ஈஸ்வரன் பேச்சு
திருச்செங்கோடு: ''திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில், 2,000 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய எனக்கு, உதய-சூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்,'' என, கொ.ம.தே.க., பொதுச்செயலாளரும், வேட்பாளருமான ஈஸ்-வரன் பிரச்சாரத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
திருச்செங்கோடு தொகுதி சக்திநாயக்கன்பாளையம், 85.கவுண்டம்-பாளையம், பூவாளகுட்டை, எலிமேடு, பள்ளிப்பட்டி, கிழக்கு பள்ளிப்பட்டி, கிளாப்பாளையம், 87.கவுண்டம்பாளையம், குமார-மங்கலம், உள்ளிட்ட பகுதிகளில், உதயசூரியன் சின்னத்திற்கு, வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பள்ளிக்கூடத்திற்கு செல்வதுபோல் விடுமுறை எடுக்காமல், அனைத்து சட்டசபை கூட்டங்களிலும் நான் பங்கேற்றுள்ளேன். 165 முறை சட்டசபையில் பேசியிருக்கிறேன். அப்படி பேசி பேசி தான் இந்த தொகுதிக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்-வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ரிங் ரோடு, சித்தா-ளந்துார் வரை நான்கு வழிச்சாலை, ஈரோடு ரோடு நான்கு வழிச்-சாலை, சங்ககிரி ரோடு நான்கு வழிச்சாலை, மலையடிகுட்டை ஏரி, சூரியம்பாளையம் ஏரி, ராஜா கவுண்டம்பாளையம் ஏரி, அம்மன் குளம், தெப்பக்குளம், தெப்ப தேர்த்திருவிழா, புதிய தேர் கட்டும் பணிகள், மாவட்ட மருத்துவமனைக்கு இணையான அரசு மருத்துவமனை, அறிவுசார் மையம் என, சொல்லிக்-கொண்டே போகலாம்.
இன்னும் வரும் காலங்களில் கிராமப்புறங்களில் உள்ள கட்ட-மைப்புகளை மேம்படுத்த வேண்டி உள்ளது. இந்த ஐந்தாண்டில் தொகுதியில் அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறோம். கிரா-மங்கள் தோறும் வேண்டிய அனைத்து நல்ல திட்டங்களையும் செய்து கொடுக்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
துணை தேர்தல் கமிஷனர் ஆய்வு
-
பால பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
-
நேரு கல்லுாரியில் 3,300 மாணவர்களுக்கு பணி ஆணை
-
'காசாகிராண்ட்' சி.பி.எல். சீசன்-1 திருவிழா: 162 ரன் குவித்த குபேரா தண்டர்ஹாக்ஸ்
-
சுயே. வேட்பாளர்களுக்கு சின்னம் ;தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய்
-
மாற்று திறனாளிகள், முதியவர்கள் ஓட்டு போட செல்வதற்கு இலவச பஸ்