திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் வாகனங்கள்

திண்டிவனம்: திண்டிவனத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மழை மற்றும் வெயிலில் நீண்ட நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கி, வீணாகி வருகிறது.

திண்டிவனம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் விபத்து மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் இல்லாததால் நுாற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் என நீண்ட நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள காலி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் துருப்பிடித்து மக்கி வீணாகி வருகிறது.

எனவே, நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை மாவட்ட காவல்துறையின் அனுமதி பெற்று, விரைவில் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement