கலெக்டர் அலுவலகததுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்
கோவை:ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு, கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
வழக்கமான சோதனைக்கு பிறகு, இது வழக்கமான புரளி என போலீசார் தெரிவித்தனர்.
சில மாதங்களாகவே கோவையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டுமே 25 முறைக்கு மேல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
விசாரிக்கிறோம், புலனாய்வு செய்கிறோம், நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம் என போலீசார் பொறுமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, புலனாய்வில் ஒரு அடியாவது முன்னேற்றம் உண்டா என்று கேட்டால் பதில் இல்லை.
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், போலீஸ் பராமரிப்பில் உள்ள மோப்ப நாய்கள் ஆக்டிவாக இருப்பதற்காக யாராவது சைபர் களத்தில் விளையாடுகிறார்களோ என்றும் சிலருக்கு சந்தேகம். எப்படியும் தேர்தல் முடியும் வரை போலீசுக்கு இதில் கவனம் செலுத்த அவகாசம் கிடைக்காது.
மேலும்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா
-
அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் பேச்சு