அ.தி.மு.க., பொதுச் செயலாளர் உளுந்துார்பேட்டையில் பிரசாரம் ;மாவட்ட செயலாளர் அழைப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் ஏப்ரல் 7 மாலை அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க.. பொதுச்செயலாளர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் குமரகுரு அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் உளுந்துார்பேட்டை குமரகுரு, கள்ளக்குறிச்சி ராஜிவ்காந்தி, சங்கராபுரம் ராகேஷ், ரிஷிவந்தியம் பா.ம.க., வேட்பாளர் செழியன், திருக்கோவிலுார் அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

இன்று மாலை 5:00 மணியளவில் அஜீஸ் நகர் அருகே 5 வேட்பாளர்களையும் ஆதரித்து பேசுகிறார். அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement