மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
சென்னை: மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? என்ற கேள்விக்கு, '' உயிர் துணை, அதனால் இதிலும் துணை'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
கேள்வி: சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறீர்கள். வாரிசு அரசியலை எதிர்க்கும் சீமான், ஏன் மாற்று வேட்பாளராக மனைவியை முன்னிறுத்துகிறார். கட்சியில் வேறு யாரும் இல்லை என்று விமர்சனம் எழுகிறது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?
சீமான்: 3 சட்டசபை தேர்தலாக போட்டி போடுகிறேன். இது 3வது சட்டசபை தேர்தல். எனது மனைவியை தான் துணை வேட்பாளராக நிறுத்துகிறேன். அவள் உயிர் துணை, அதனால் இதிலும் துணை. அரசியலில் 117 பெண்களுக்கு இடம் கொடுத்தவன், இன்னொரு பெண்ணுக்கு வாய்ப்பை பறிக்கிறான் என்று நீங்கள் பேசுவது ஏற்புடையதாக இல்லை.
இன்னொருவருக்கு கொடுக்கிற வாய்ப்பு, அப்படி பார்த்தாலும் சீமான் இன்னொரு பெண்ணுக்கு தான் கொடுக்கிறான் என்று பெருமையாக தான் பேச வேண்டும். என் மனைவிக்கு ஆக பெறும் தகுதி இருப்பதாக, என்னை விட தகுதி இருப்பதாக நான் கருதுகிறேன். நான் இப்பொழுது தான் அரசியலுக்கு வந்தேன். அவள் பிறக்கும் போதே அமைச்சர் மகள். அதுவும் ஒரு தமிழ் பேரறிஞர் மகள். என் மனைவி யார் என்று எனக்கு தான் தெரியும்.
அவள் தந்த விடுதலையில் தான், நான் இவ்வளவு சுதந்திரமாக இயங்குகிறேன். என்னை சகித்து கொள்வது சாதாரண பெண்ணால் முடியாது. தூங்க மாட்டேன். நள்ளிரவில் படித்து கொண்டு இருப்பேன். எப்பொழுது வருவேன், எப்பொழுது போவேன் என்று எதுவும் தெரியாது. அவர் எனக்காக நிறைய இழந்து இருக்கிறார், அவருக்கு என் பக்கத்தில் துணையாக நிற்கும் வாய்ப்பை கூட கொடுக்கவில்லை என்றால், நான் மனிதனாகவே இருக்க முடியாது. இவ்வாறு சீமான் கூறினார்.
பேசி பேசி தேர்தல்ல ஜெயிக்கிறாரோ, இல்லையோ . எதுகை, மோனை பேச்சில் ஒரிஜினல் அரசியல்வாதி ஆகிவிட்டார் சீமானு.
யாரையும் நம்பாத குடும்ப கட்சி ராபரீதேவி லல்லுவின் வாரிசு சீமான்
இதை எந்தவிதத்தில் நச் பதில் என்று எடுத்துக்கொள்கிறீர்களோ தெரியவில்லை இவர் இப்படி பதிலளிப்பது இவருக்கு குடும்ப அரசியலை எதிர்த்து பேசும் அறுகதையை இழக்கவைக்குது.
மற்றவர்களில் ஒருவர் பெயரிட்டால் அவர் தான் கட்சியில் அடுத்த இடம் என்ற முத்திரை வரும்.அதை சீமான் விரும்பவில்லை.இதுவே காரணம்
வாரிசு அரசியல் எல்லாம் அடுத்தவனுக்குதான்ப்பா. இத போய் ஒரு கேள்வினு கேட்டுகிட்டு.
Enaivi...Thunaivi will be considered in next election
Enaivi...Thunaivi will be considered in next election
இந்த வந்துட்டாங்களா குடும்ப கட்சின்னு சொல்றதுக்கு. ஆண்டாண்டு காலமாக வெளிப்படையாக ஒரு குடும்பமே தமிழ்நாட்டை ஆட்டைய போட்டுக்கிட்டு இருக்கு. அத ஒண்ணும் சொல்ல மாட்டார்களாம். அவங்களையே திரும்ப திரும்ப தேர்ந்தெடுப்பங்களாம். ஆனால், மாற்று வேட்பாளரா சொல்லிட்டதனால குடும்ப கட்சியாம். சீமான் பேசும் அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் இந்த அவருக்கு எதிராக புரியாமல் பேசும் அறிவிலி மக்களும் இருக்கிறார்கள். அதை புரிந்துகொள்ள வேண்டும். சீமான் கூறும் கொள்கைகளை யாராலும் இன்றைக்கு மறுதலிக்க முடியாது. சிறு சிறு விஷயங்களை பெரிது படுத்தி அவருடைய நேர்மையான, மக்களுக்கான அரசியலை நீர்த்துப்போக செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் தமிழர் நிச்சயம் வெல்லும். ஏனென்றால். அது மக்களுக்கான அரசியல், காலத்தின் கட்டாயம்.
இப்பதான் சீமன் அரசியல் அதிகளத்தில் இருப்பதற்கு முழு தகுதி இருக்கு. குடும்ப கட்சிங்களை எதிர்க்க குடும்பமாதானே எதிர்க்கணும்?
எப்படியும் வெற்றி பெற போவதில்லை. அதனால் என்னமேலும்
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்