சங்கராபுரத்தில் தி.மு.க.,அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ராகேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் காலை 11.30 மணிக்கு மனு தாக்கல் செய்தார். சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினர் புடை சூழ ஊர்வலமாக 2 கி.மீ., துாரம் நடந்து வந்து சங்கராபுரம் தாலுக்கா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
12.30 மணிக்கு தி.மு.க. வேட்பாளர் கடைவீதி மும்முனை சந்திப்பில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க., மற்றும் கூட்டணிகட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து தாலுக்கா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
இரு பிரதான கட்சிகளும் ஒரே நாளில் மனு தாக்கல் செய்ததால் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை 2 மணி நேரம் சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மேலும்
-
உள்வாங்கிய விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவக்கம்
-
அ.தி.மு.க., ஆட்சி மலரும்: புவனேந்திரன் நம்பிக்கை
-
புவனகிரியில் 12 மனுக்கள் தள்ளுபடி
-
புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு? அரசியல் கட்சிகள் குழப்பம்
-
நேரடி அதிகாரி உத்தரவை பின்பற்றுங்கள்: டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவு
-
100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிசெய்ய நடவடிக்கை