அ.தி.மு.க., ஆட்சி மலரும்: புவனேந்திரன் நம்பிக்கை
குறிஞ்சிப்பாடி: தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி மலரும் என, அ.திமு.க.,. வேட்பாளர் புவனேந்திரன் கூறினார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க., சார்பில், புவனேந்திரன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன், பா.ஜ., கிருஷ்ணமூர்த்தி மற்றும், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும், கூட்டணி கட்சித் தலைவர்கள் வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் வேட்பாளர் புவனேந்திரன் கூறுகையில், ' தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலரும். பழனிசாமி முதல்வராக நிச்சயம் பதவியேற்பார். தொகுதியின் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை செய்வேன்,' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த முடிவுக்கு சம்மதம் ஆனால் லெபனானை தாக்குவோம் :இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
-
மீனாட்சி அம்மன் கோயில் தேர்களுக்கு 7 டன் எடையில் புதிய இரும்பு சக்கரங்கள்: வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி தீவிரம்
-
ஈரோடில் பணிமனை திறப்பு ;காங்., நிர்வாகிகள் 'ஆப்சென்ட்'
-
மங்களூரு - எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
-
த.வெ.க., பிரசாரத்தில் 'அலப்பறை' ;நோயாளிகள், முதியோர் அவதி
Advertisement
Advertisement