புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு? அரசியல் கட்சிகள் குழப்பம்
மந்தாரக்குப்பம்: மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் உள்ள புதிய வாக்காளர்கள் யாருக்கு ஒட்டளிக்க உள்ளனர் என அரசியல் கட்சிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., த.வெ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில் இளைஞர்கள் ஓட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் கட்சியினர்கள் உற்று பார்க்கின்றனர்.
இந்நிலையில் இளம் வாக்காளர்கள் தங்களது தொகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல், தொகுதி முன்னேற்றம் குறித்து செயல்பட்டு வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட தயாராகி வருகின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலை விட, தற்போது 18, 19 வயதினர் முதன் முறையாக அதிகளவில் ஓட்டளிக்க உள்ளனர்.
முதன் முறை ஒட்டளிக்கும் புதிய இளம் வாக்காளர்கள் இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு ஓட்டளிக்க தயராகி வருகின்றனர்.
இவர்களின் ஓட்டு எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என அரசியல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும்
-
ஓட்டுப்பதிவுக்கு முந்தைய வழிமுறைகள் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை
-
மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
-
தமிழ்ச்சங்க விழாவில் பங்கேற்க அழைப்பு
-
தி.மு.க.,வை புறக்கணிப்போம் ;விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் முடிவு
-
மீனவர் மீது தாக்குதல்; மூவர் கைது
-
போக்குவரத்து நெரிசலுக்கு மேம்பாலம் விரிவுபடுத்தணும்