10,000 பேருக்கு பணி ஆணை வி.ஐ.டி., வேந்தர் தகவல்
சென்னை:''வி.ஐ.டி.,யில் நடப்பாண்டில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 10,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது,'' என, பல்கேலை வேந்தர் கோ.விஸ்வநாதன் தெரிவித்தார்.
வேலுார் வி.ஐ.டி., பல்கலையில் நடந்த பல்கலை தின விழா மற்றும் விளையாட்டு விழாவில், தலைமை ஏற்ற பல்கலை வேந்தர் கோ.விஸ்வநாதன், 3,800 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் 2.23 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் மாணவர்களின் மத்தியில் பேசியதாவது:
மக்கள் தொகையில், சீனாவை இந்தியா மிஞ்சிவிட்டது; ஆனால், கல்வியில் பின்தங்கி உள்ளது. இப்படி இருந்தால், உலகில் தலைமை ஏற்க முடியாது. உலகில் கல்வியில் சிறந்த நாடுகளே உயர்கின்றன.
சீனாவில் கடந்தாண்டு, கல்விக்காக 800 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 12 பில்லியன் டாலர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 22 அரசு பல்கலைகளில், இரண்டில் மட்டுமே 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பல்கலைகளில் சேர்க்கையை அதிகரித்தால் மட்டுமே ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்ய முடியும்.
வி.ஐ.டி., பல்கலையில், கடந்தாண்டு 1,000 நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாமில், 34,000 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். இந்தாண்டில் 10,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து, 'ஸ்டார்ஸ்' திட்டத்தில் இங்கு சேர்ந்த மாணவர்கள், இன்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், வேலுார் சி.எம்.சி., இயக்குநர் பிஜு ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், ''ஒருவரின் வாழ்நாள் முழுதும் தொடர வேண்டிய பயிற்சிதான் கல்வி,'' என்றார்.
நிகழ்வில் வி.ஐ.டி., துணை தலைவர்கள், பதிவாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!
-
காலப்பட்டில் காங்., வேட்பாளர் ஷாஜகான் ஓட்டுசேகரிப்பு
-
சேதராப்பட்டில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் : என்.ஆர்., காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு
-
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
-
தி.மு.க., தேர்தல் அறிக்கை தமிழக முதல்வர் வெளியீடு
-
வில்லியனுார் தொகுதியில் ரூ.424 கோடியில் வளர்ச்சி பணி சாதனை பட்டியலை வெளியிட்டு தி.மு.க., வேட்பாளர் சிவா பேட்டி