கருவாடு வியாபாரி தற்கொலை

மணலி:சென்னை, மணலி - சின்னசேக்காடு, பல்ஜி பாளையத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து, 39; கருவாடு வியாபாரி. இவரது மனைவி முனி தேவி, இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, அறைக்குள் உறங்க சென்றவர், நேற்று காலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறையின் கதவை திறந்து பார்த்தபோது, இசக்கி முத்து, மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

மணலி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து, குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement