பைக்குகள் மோதல் பஸ் கண்டக்டர் பலி

நாட்றம்பள்ளி நாட்றம்பள்ளி அருகே, பைக்குகள் மோதிய விபத்தில், அரசு பஸ் கண்டக்டர் பலியானார்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியை சேர்ந்தவர் அரசு பஸ் கண்டக்டர் சின்னத்தம்பி, 55. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், ஹோண்டா பைக்கில், வெலக்கல்நத்தம் பகுதியில் இருந்து, மாட்டு தீவனம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். வெலக்கல்நத்தம் கூட்ரோடு பகுதியை கடந்தபோது, பின்னால் வந்த மற்றொரு ஹோண்டா பைக், சின்னதம்பியின் பைக் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட சின்னதம்பி படுகாயமடைந்து, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். நாட்றம்பள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement