ஆளை விடுங்க சாமி!
'இந்த விளம்பர மோகம், விபரீதத்தில் முடியாமல் இருந்தால் சரி...' என, கவலையுடன் கூறுகின்றனர், மத்திய பிரதேச மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், 'ரங் பஞ்சமி' என்ற பண்டிகை இங்கு கொண்டாடப்பட்டது. மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக, வட மாநிலங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இதையொட்டி, மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்றார். அப்போது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ஒரு பெரிய வாளை, முதல்வர் கையில் கொடுத்தனர். அதை வாங்கிய முதல்வர் மோகன் யாதவ், மேலே உயர்த்திப் பிடித்து, 'போஸ்' கொடுத்தார்.
ஆனால், அங்கிருந்த சிலர், 'தலைவரே, வாளை உயர்த்திப் பிடித்தால் மட்டும் போதாது; சினிமா கதாநாயகன் போல், வாளை நான்கு புறமும் சுழற்றி, சாகசம் செய்யுங்கள்; எதிர்க்கட்சியினர் அசந்து விடுவர்...' என, முதல்வரை உசுப்பேற்றினர்.
அவரோ, 'முறையாக பயிற்சி பெறாமல் வாளை சுழற்றினால், காயம் ஏற்பட்டு விடும்...' என, மறுத்தார். அருகில் இருந்தவர்கள், அதை கேட்காமல், வாளை சுழற்றும்படி தொடர்ந்து வற்புறுத்தினர்.
வேறு வழியின்றி, சில நிமிடங்கள் வாளை சுழற்றுவது போல போஸ் கொடுத்த மோகன் யாதவ், 'ஆளை விடுங்க சாமி...' என கூறியபடியே, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதை பார்த்த மக்கள், 'இவங்க விளம்பர மோகம், யாரையும் காயப்படுத்தாமல் இருந்தால் சரி தான்...' என, புலம்பினர்.
மேலும்
-
ஜாப் ஒர்க் நிறுவனங்கள் நலிவு
-
பொள்ளாச்சியில் 14; வால்பாறையில் 6 பேரின் மனுக்கள் ஏற்பு: இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை 'ரிலீஸ்'
-
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.03 கோடிக்கு வர்த்தகம்
-
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இரு வெப்கேமராக்கள் இருக்கும்
-
பிளேக் மாரியம்மன் கோவிலில் பாலாலயம்
-
ஆசிரியருக்கு'கீரின் சாம்பியன்' விருது