விபத்தில் ஓய்வு எஸ்.ஐ., பலி இண்டூர், ஏப். 7



தர்மபுரி டவுன், சத்யா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., கணேசன், 68. இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம், அவரின் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், தர்ம

புரியில் இருந்து சோம்பட்டி நோக்கி பென்னாகரம் சாலையில் சென்றார். காலை, 6:45 மணிக்கு சின்ன தடங்கம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேசன், சம்பவ இடத்திலேயே பலியானார். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement