நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீசை நம்ப தயாரில்லை!: சுப்ரீம் கோர்ட் கடுப்பு
புதுடில்லி: 'மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிக்கு சென்ற நீதிபதிகள் ஏழு பேர் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில், மாநில போலீசாரை நம்ப தயாராக இல்லை' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மீதான தாக்குதல் முயற்சி குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்., 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்து, அவர்களது பெயர்களை சேர்க்க உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், கொல்கட்டா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஏழு நீதிபதிகள் கடந்த வாரம் மால்டாவுக்கு சென்றிருந்தனர்.
மாலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஏழு நீதிபதிகளையும் சிறைபிடித்து வைத்த கும்பல், உணவு, குடிநீர் கூட வழங்காமல் அவர்களை துன்புறுத்தியது. இது பற்றி தகவல் அறிந்ததும் பதறி போன உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் மாநில போலீஸ் டி.ஜி.பி., உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
அதிகார தோரணை
ஆனால், மாநில அரசு நிர்வாகம் எந்த துரும்பையும் அசைக்காததால், கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நேரடியாக தலையிட்டு, ஏழு நீதிபதிகளையும் மீட்க நடவடிக்கை எடுத்தார். எனினும், அந்த இடத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டபோது, வாகனங்கள் மீது கல்வீசியும், தடியால் அடித்தும் தாக்கினர்.
நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் நேற்று மேற்கு வங்க தலைமை செயலரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, மேற்கு வங்க தலைமை செயலர் துஷ்யந்த் நாரியாலா மற்றும் அரசு உயரதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராகினர்.
விசாரணையை துவக்கிய நீதிபதிகள், ''கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தார். ''ஆனால், உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்காக அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, மேற்கு வங்க தலைமை செயலர் துஷ்யந்த் நாரியாலாவுக்கு உத்தர விட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், ''சம்பவம் நிகழ்ந்த நாளன்று, டில்லிக்கு விமானத்தில் சென்றேன். விமானத்தில் தொலைபேசியை பயன்படுத்த முடியாது. தவிர, கொல்கட்டாவில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை,'' என கூறினார்.
உடனடியாக குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ''மேற்கு வங்கத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்த உடனேயே, தொடர்ச்சியாக உங்களை தொலைபேசியில் அழைத்து கொண்டே தான் இருந்தனர்.
''ஆனால், டில்லியில் தரையிறங்கியபோதும் கூட, அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை. தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக மொபைல் போன் எண்ணை கொடுத்திருந்தால், இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் இருந்து ஏழு நீதிபதிகளையும் உடனே காப்பாற்றி இருக்கலாம்,'' என்றார்.
அதற்கு பதில் அளித்த தலைமை செயலர், ''நான் பயன்படுத்தும் தொலைபேசி எண் மிகவும் பாதுகாக்கப்பட்டது,'' என கூறினார்.
இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி பக்சி, ''கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கூட தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு உங்கள் தொலைபேசி எண் அவ்வளவு ரகசியமாக பாதுகாக்கப்பட்டதா? அதிகார தோரணையில் இருந்து சற்று கீழே இறங்கி வாருங்கள்.
மன்னிப்பு
''அப்போது தான் கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போன்ற சாதாரண மனிதர்கள் உங்களை எளிதாக அணுக முடியும். ''அன்றைய நாளில் நிகழ்ந்த தவறுக்காக தலைமை நீதிபதியிடம் நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்,'' என்றார். இதையடுத்து நீதிபதிகள் முன்னிலையில், தலைமை செயலர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க அரசு நிர்வாகம் முழுதாக தோல்வி அடைந்துள்ளது. மேற்கு வங்க அரசில் பணியாற்றும் மூத்த உயரதிகாரிகள் இப்படி தான் நடந்து கொள்வார்களா? தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் அரசியல் நுழைந்துவிட்டது. இது மிகவும் வருந்தத்தக்கது.
மாவட்ட கலெக்டரும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் வன்முறை நிகழ்ந்தபோது வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொ ண்டிருந்தனர். நுாற்றுக்கணக்கில் பெண்கள் திரண்டு இருந்ததால், எதுவும் செய்ய முடியவில்லை என விளக்கம் அளிக்கின்றனர்.
திடீரென அந்த இடத்தில் எப்படி நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிடாமல் இருந்திருந்தால், நிச்சயம் அங்கு அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். வன்முறை தொடர்பாக கைதான 26 பேரையும் விசாரணைக்காக என்.ஐ.ஏ.,விடம் மாநில போலீசார் ஒப்படைக்க வேண்டும்.
வழக்கு தொடர்பான ஆவணங்களையும் தர வேண்டும். ஏனெனில் உள்ளூர் போலீசாரை நாங்கள் நம்ப தயாராக இல்லை. வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட நபரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், இது கச்சிதமாக திட்டமிடப்பட்ட சம்பவம் போல தோன்றுகிறது.
தலைமை செயலரும், அரசு அதிகாரிகளும் இனியாவது பொறுப்புடன் செயல்படுவீர்கள் என நம்புகிறோம். கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சிறைபிடிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
தற்போதைக்கு உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிக்கு சிறப்பான ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இப்படி மோசமான மக்கள் வரி ஊழியர்கள் அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் சட்டம் எதை வைத்து மக்கள் எல்லோரும் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொல்கிறது என்று தெரியவில்லை ஆனால் இந்த இடத்தில் நீதிபதிகளே அதை மீறுகிறார்களே மக்கள் இதைப் பற்றி எங்கே முறையிடுவது பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வந்தால் நீதிமன்றம் அதற்குரிய நஷ்ட ஈடு தொகையை வருமான இழப்புத் தொகையை கொடுக்குமா என்பதை தெரிவிக்க பணிவுடன் மதிப்புக்குரிய நீதிபதிகளை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
மேற்கு வங்கத்தில் இருந்த தலைமை செயலாளர் காவல் துறை தலைமை இயக்குனர் அங்குள்ள மாநில அரசுக்கு சாதகமாக உள்ளதாக தேர்தல் ஆணையம் தலையிட்டு அந்த இடங்களில் தற்போதுள்ள நபர்களை நியமித்தது.தகுதியானவர்கள் பெயர்களை எல்லாம் தேர்தல் ஆணையம் நீக்கி விட்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை.எனவே நாளை குடியுரிமையும் பறிபோகலாம் என போராடியுள்ளனர்.தேர்தல் காலம் முடிந்து அதன் பிறகு நிதானமாக வாக்காளர் பட்டியலை திருத்தும் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.ஆளும் அரசியல் வாதிகளை திருப்த்தி செய்து பதவியில் நீடிக்க எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல செயல்படும் தேர்தல் ஆணையத்தின் செயல் நடுநிலையானதாக இல்லை.இந்த நாட்டில் அனைத்து அதிகார அமைப்புகளும் மக்களை துன்புறுத்தவே அமைக்கப் பட்டுள்ளது போல செயல்படுகின்றன.
மேற்கு பெங்கால் மாநிலம் இந்தியாவில்தான் அமைந்துள்ளது .
அப்படியாயின் மேற்கு பெங்கால் அரசு ஊழியர்கள் ஏன் இந்தியாவின் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. அம்மாநில தலைமை செயலர் இந்தியாவின் ஐ ஏ எஸ் அதிகாரி ஏன் போன் கால்களி நிராகரித்தார். முதலில் சம்பத்தப்பட்ட மாநில அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்துவிட்டு பின்னர் NIAவிசாரணை நடத்தவேண்டும்
மேற்கு பெங்கால் நிலைமை மிகவும் கவலைக்கு உரியதாக உள்ளது.
மம்தாவை தேசத்துரோகியாக அறிவிக்க வேண்டும். மேற்குவங்க அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இனிமேல் தேவைபட்டால் சி பி ஐ, ஈ டீ எல்லாம் ராணுவ உதவியுடன் களம் இறங்க வேண்டும். இதையெல்லாம் செய்ய நேர்மையான நீதித்துறை, அதிகாரிகள் வேண்டும்.
தலைமை செயலரின் விளக்கமானது அவர் மம்தாவின் கையாள் போலவே பேசுகின்றார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சம்பவம் நடப்பது பற்றி முன்னமே தெரிந்த காரணத்தால்தான் அவர் வேண்டுமென்றே அந்த நேரத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். திட்டமிட்ட சதிதான் இது. ஒட்டுமொத்த மாநிலத்தில் ஆளுனரின் ஆட்சியை அமல்படுத்தாமல் விசாரணையோடு நிறுத்திக்கொண்டதை ஏற்க முடியவில்லை. மாநிலத்தில் தேர்தல் என்றாலே அங்கு ஆளும் தரப்பினரை வெளியேற்றிவிட்டுதான் தேர்தலை நடத்த வேண்டும். இல்லையேல் அதே கட்சி தங்களது பதவியை பயன்படுத்தி எல்லாவிதமான தகிடுதம் வேலையை காட்டி மீண்டும் ஆட்சிக்கு வர துடிப்பார்கள். கேட்க நாதி இருக்காது. இதனை எப்படி உச்ச நீதிமன்றம் யோசிக்காமல் போனது?
மேற்கு வங்கத்தில் இது ஒன்றும் புதிது அல்ல இது போன்றே பல முறைகள் மத்திய அரசு ஊழியர்கள் இப்போது நீதிபதிகள் இவர்களுக்கு காவு பலி நடை பெற்றுகொண்டேதான் இருக்கின்றன ஏனென்றால் மாநில அரசை எப்போதோ டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் உச்ச நீதி மன்றம் அதை செய்ய தவறியதால்வந்த விளைவுகள்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன இதைவிட வரப்போகும் மாநில தேர்தல் சமயத்தில் இதைவிட இன்னும் தீவிரவாக அந்த மாநில அரசு தலையிட்டு மகா பாதகங்களை நிறைவேற்றும் உச்ச நீதி மன்றமும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கும் அவர்கள்மீது எந்த நடவடிக்கைளையம் உடனே எடுக்க தைரியமில்லை.
மேற்கு வங்க மாநில நிர்வாகம் தோல்வி என்றால், ஜனாதிபதி ஆட்சி அவசியம். குற்றம் தண்டிக்க உச்ச நீதிமன்றம் தயங்குகிறது. ஏன்? மக்களால் தேர்வு செய்ய ஆளும் கட்சி தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் நுழைந்து விட்டால் எளிதில் சீர் செய்ய முடியாது. தற்போது தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நுழைந்து பாழ் படுத்தி வருகின்றனர். இதனை நீதிமன்றம் சீர் செய்ய வழி தெரியாமல் திணறுகிறது? இதனை சீர் செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையம், மத்திய அரசு , நீதிமன்றம் சார்புடையது. போலி வாக்காளர்கள் கொண்ட தேர்தல் ஒரு கண் துடைப்பு.
மேற்கு வங்க நீதிபதிகள் சிறை. மாநில போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்றால், நம்பிக்கை துரோக போலீஸ் டிஸ்மிஸ் செய்ய வேண்டாமா? அதன் பின் தான் தேசிய புலனாய்வு முகமை. பணியில் இருந்தால் இடையூறு இருக்கும்? தலைமை நீதிபதி மாநில தலைமை செயலரை மத்திய உள்துறை அல்லது கவர்னர் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும். தலைமை செயலர் பயன் படுத்தும் தொலைபேசி மிகவும் பாதுகாப்பானதாம். முட்டாள்தனம். அரசு அதிகாரி அரசுக்கு தொலைபேசி எண் தெரியப்படுத்து கட்டாயம். மன்னிக்க முடியாத குற்றம். கவர்னர், தலைமை செயலரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய பரிதுரைக்காத நீதிமன்றமும் அரசு துறைகள் போலவே தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும்
-
சவூதி - பஹ்ரைன் இடையிலான கிங் பஹத் பாலம் மீண்டும் திறப்பு!
-
உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது; நெல்லை பிரசாரத்தில் விஜய் பேச்சு
-
திருப்பரங்குன்றம் வழக்கு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை
-
நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி
-
தேர்தல் ஆணையம் மீது புகார் கூறாத ஸ்டாலின்: புகார்களை அடுக்கும் மம்தா: எதிர்க்கட்சிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு?
-
மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு