ஆந்திராவிலிருந்து கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: விரைவு ரயிலில், ஆந்திராவில் இருந்து கடத்திய 12 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
மாம்பலம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சார்கார் விரைவு ரயில், மாம்பலம் வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த நபர் மீது, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதித்த போது, 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு 6 லட்சம் ரூபாய்.
விசாரணையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஜஹபர் சாதிக் 44, எனவும், விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த, மேல் நடவடிக்கைக்காக, வியாசர்பாடியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
Advertisement
Advertisement