வீடு புகுந்து தாய், மகனை தாக்கிய வாலிபர் கைது

குமரன் நகர்: வீடு புகுந்து, தாய் மற்றும் மகனை தாக்கிய பழைய குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.

மேற்கு மாம்பலம், வாழத்தை தோப்பு குடியிருப்பைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 34. இவர், கணவரை இழந்து, இரு மகன்களுடன் வசித்து வருகிறார்.

கடந்த 4ம் தேதி இரவு, அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 24, என்பவர், ஸ்ரீதேவியின் வீட்டிற்குள் புகுந்து, அவரது 16 வயது மகன் மற்றும் அவரது நண்பரை தாக்கினார். அதை தடுக்க சென்ற ஸ்ரீதேவியையும் தாக்கினார்.

இதுகுறித்த புகாரையடுத்து குமரன் நகர் போலீசார் விசாரித்து, நண்பரான 17 வயது சிறுவன், சம்பள பணத்தை தவறவிட்டுள்ளார். அதை சதீஷ்குமார் எடுத்து செல்ல முயன்றார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஸ்ரீதேவியின் மகன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து, சதீஷ்குமாரை தாக்கியுள்ளனர். அதற்கு பழிவாங்க நினைத்த சதீஷ்குமார், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய தெரியவந்தது.

இதையடுத்து சதீஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர். இவர் மீது, குமரன் நகர் காவல் நிலையத்தில், ஒரு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்கு உள்ளது.

Advertisement