நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி
சென்னை: இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமை ஆகக்கூடாது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரஜினி கூறியதாவது: நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால் அவர்களுக்கு தானே காயம் ஆகும். இளைஞர்களுக்கு படிப்பதில் மட்டும் தான் முழு கவனம் இருக்க வேண்டும்.
படிக்கிற டைமில் படிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். அதுமட்டும் மனதில் வைத்து கொண்டு இளைஞர்கள் படிப்பில் மட்டும் தீவிர சிந்தனை எல்லாம் இருக்க வேண்டும்.
முதலில் உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த டைமில் இளைஞர்களுக்கு முதலில் சொல்வது, தயவு இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கும், கஞ்சா இதில் எல்லாம் நீங்கள் அடிமை ஆகாதீர்கள்.
அதில் அடிமையானால் உங்கள் வாழ்க்கையே கெட்டு போய்விடும். அது நீங்கள் மட்டுமல்ல உங்கள் சம்மந்தப்பட்ட தாய், தந்தை மற்றும் குடும்பம் என எல்லோருடைய வாழ்க்கையையும் நரகமாக்கிவிடும். அதனால் அது போன்ற நண்பர் கிடைத்தால் அவர்கள் கிட்ட கூட போகாதீர்கள். தூர விலகிவிடுங்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.
@block_G@
நழுவிய ரஜினி!
விஜயின் ஜனநாயகன் படம் பிரச்னை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சாரி. கருத்து சொல்ல விரும்பல'' என நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார். block_G
வாசகர் கருத்து (59)
PATTALI - chennai,இந்தியா
09 ஏப்,2026 - 14:46 Report Abuse
ஆனா இவரு பின்னாடி மட்டும் எல்லாரும் ஓடணும். இவர் படத்தை மட்டும் பார்க்கணும். இவரு மட்டும் கோடிகோடிய சம்பாதிப்பாராமா?. ரசிகர்களை ஏமாற்றிய சுயநலவாதி. 0
0
Reply
Kchandra Sekaran - ,
09 ஏப்,2026 - 01:55 Report Abuse
திமுகவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் முகமாக நடிகர்கள் பின்னால் செல்ல வேண்டாம் என கருத்து. தான் யாரை குறித்து பேசுகிறோம் என பொதுமக்களுக்கு குறிப்பால் உணர்த்த பின்னால் சென்றால் கீழே விழுந்து விடுவீகள். த.வெ.க விஜய் பிரச்சாரத்தை நினைவு படுத்தும் குறிப்பு. 0
0
Reply
ManiK - ,
08 ஏப்,2026 - 22:02 Report Abuse
எதுக்கு இந்த தேவையில்லாத கருத்து. தான் திமுக மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கியது போல எல்லா நடிகர் அரசியல்வாதிகளும் ஒடுங்க வேண்டுமா?!! 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
08 ஏப்,2026 - 19:56 Report Abuse
ஒட்டு போடும் உரிமை வயதும் திருமண வயது வரம்பும் 21 வயதுக்கு கீழ் இருக்கக்கூடாது. இல்லாவிடில் மனம் தறிகெட்டு தேவையுள்ளவற்றை தவிர்த்து தேவையற்ற தீமைகளின் பின் தான் ஓடும். 0
0
Reply
சண்முகம் - ,
08 ஏப்,2026 - 19:43 Report Abuse
உங்க பின்னால இளைஞர்கள் வந்த பொழுது குளு குளு என்று இருந்ததா? 0
0
Reply
Rajsri - chennai,இந்தியா
08 ஏப்,2026 - 18:53 Report Abuse
இது உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் பொருந்துமா? 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
08 ஏப்,2026 - 18:33 Report Abuse
ரஜினி மிகச்சரியாக கூறியுள்ளார். 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
08 ஏப்,2026 - 18:07 Report Abuse
அதுசரி - அழுத்தம் கொடுத்தால் ஆடத்தான் செய்வார்கள் 0
0
Reply
SIVA - chennai,இந்தியா
08 ஏப்,2026 - 17:47 Report Abuse
குடி வேண்டாம் கஞ்சா அடிக்க கூடாது கெட்ட நண்பர்கள் பழக்கம் வேண்டாம் என்று யாருகோ
ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்கின்றார் .... 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
08 ஏப்,2026 - 17:19 Report Abuse
உன் படத்துக்கு பால் குடம், பூ மாலைனு போகாதே என்று பாட்டாளி போராடினோம் அப்போ நீங்க இதை சொன்னியா? 0
0
Reply
மேலும் 49 கருத்துக்கள்...
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement